வேலையை தவிர்த்து வெளியே சுத்தி பார்க்க உங்களுக்கு அதிக நேரம் இருக்கிறதா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Are you getting a lot of time to explore outside of work? exploreverbFIGURATIVEto travel around a place, etc. in order to learn about it.ஓரிடம், முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்வதற்காக அதனைச் சுற்றிப்பார்; இட ஆய்வுப் பயணம் மேற்கொள்.

அந்தப் பைகளை உங்கள் ரூம் வரைக்கும் எடுத்துட்டு போக உதவி வேண்டுமா?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Do you need help carrying those bags up to your room?என்று சொல்லலாம். Would you like a hand carrying those bags up to your room? என்றும் சொல்லலாம்.

ஹாய் கிருஷ்ணா, உனக்கு ஆயுசு நூறு, இப்பதான் சீதா கிட்ட உன்னோட புது வீட்டை பத்தி சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Hi Krishna, speak of the devil, I was just telling Sita about your new home.

நான் எப்படி சொன்னாலும் அவன் அதை புரிஞ்சுக்க மாட்டேங்குறான்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerNo matter how I say it, he doesn’t get it. No matter how I say it, he doesn’t understand it. “However I say it” என்பது Indian or Asian variant.

போன வாரம் பஸ் ஸ்டாண்ட்ல அவனுக்காக ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerLast week I had been waiting for him at the Bus terminus/ terminal for 2 hours. How to use “In” vs “at” for place? The choice of using “at” or “in” for a place is determined by the question of “where”. AtWhen you are at the top, bottom, or end of […]