சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லு.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer Don’t beat around the bush, tell me directly. Don’t beat around the bush என்பதை ஆங்கிலத்தில் Idioms (இடிஎம்ஸ்) என்று கூறுவார்கள். இவற்றை அப்படியே மொழிபெயர்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்காது. அதனால் Idioms பயன்பாடு என்பதை நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நிறைய வேலையாகத் தோன்றலாம், ஆனால் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மொழிச்சொற்களைக் கற்றுக்கொள்வது ஜாலியானது.

நீங்க எப்படி அப்படி சொல்லலாம்?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்? *Answer* How could you tell like that? இங்கே “Could” என்பது முடிந்த ஒன்றைப்பற்றி கேட்பதாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது “Past tense” இல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. “Could”என்பதை “Present tense” லும் உபயோகப்படுத்தலாம். கோரிக்கைகளுக்கு  ,”Can” or “Could” பயன்படுத்தப்படுகிறது. நாம் யாரையாவது ஏதாவது செய்யச் சொல்லும்போது, நம் கேள்விகளில் “can you please” என்ற வாக்கிய அமைப்பை அடிக்கடி சேர்க்கிறோம். இது மரியாதைக்குரியதாக இருக்க “Could you please” […]

ஜாக்கிரதை! மாடு முட்ட போகுது.

மேல சொன்ன வாக்கியத்தை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? *Answer* Beware! The bull will gore. ஜாக்கிரதை! என்பதை ‘Be careful’, ‘Look out’, ‘Watch out’, ‘Have a care’ என்று பல விதங்களில் சொல்லலாம்.

நான் காலைல தினமும் நாலு முப்பது மணிக்கு வாக்கிங் போறேன்.இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

*Answer* இந்த வாக்கியத்தை இங்கிலீஷ்ல பல விதமாக சொல்லலாம். Daily I go walking at 4.30 in the morning. Daily I go for a walk at 4.30 in the morning. I go walking at 4.30 am daily. I go for a walk at 4.30 am daily. Thank you.

கீழ்க்கண்ட வார்த்தைகளை இங்கிலீஷ்ல ‘Phrasal Verb’ என்று சொல்வோம். இதனுடைய பொருள் என்ன?

Bring up *Answer* இந்த  ‘Phrasal Verb’ பல அர்த்தங்களில் உபயோகிக்கப்படுகிறது. அடிக்கடி பேச்சுவழக்கில் உபயோகப்படும் சில அர்த்தங்களை இப்போது பார்ப்போம். *bring something  up* ​to mention a subject or start to talk about it SYNONYM raise E g., Bring it up at the meeting. *bring somebody  up* ​  [often passive] to care for a child, teaching him or her how […]

கீழ இருக்கிற இங்கிலீஷ் வார்த்தையை எப்படி pronuounce பண்ணுவீங்க?

Asterisk  the sign (*) that you use as a reference mark to make people notice something in a piece of writing. *Answer* பொதுவா எல்லோரும் இதை  “ஆஸ்ட்ரிக்ஸ்” என்று சொல்லுவார்கள். ஆனால் இதன் சரியான உச்சரிப்பு: *ஆஸ்ட-ரிஸ்க்*

பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க. இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கீங்க இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? *Answer* ஒரு வாக்கியத்தை இங்கிலீஷ்ல நம்ம பல விதமாக சொல்லலாம். அதிலும் சில சரியான வாக்கியங்களை கீழே பாருங்கள். Long time no see. How are you doing? I haven’t seen you for ages. How are you? I haven’t seen you in a long time. How are you doing?