இங்குள்ள சில வீடுகள் சிதிலமடைந்துள்ளன.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerSome of the houses around here are dilapidated. dilapidated: (used about buildings, furniture, etc.) old and broken.(கட்டடம், அறைகலன், முதலியவை வகையில்) பழைமையான மற்றும் பழுதான; சேதமுற்ற. இதை, “Di-la-pi-dei-tid” (டி-ல-பி-டெய்-டிட்) என்று உச்சரிக்க வேண்டும்.

திருச்சி போய் சேர இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? Answer How far is it to reach Trichy? எவ்வளவு தூரம் என்பதை “How far?” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவோம்.

கோடையில் பெய்யும் மழையின் போது வரும் மண் வாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? I really like the petrichor when it rains in the summer. Petrichor என்பதை “பெற்றிகோர்” என்று உச்சரிக்க வேண்டும்