தயவு செய்து இந்த தபாலை எனக்காக அனுப்ப முடியுமா? எனக்கு இப்போது டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் இருப்பதால் நான் செல்ல வேண்டும்,

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerCould you please send this mail for me? I have a doctor’s appointment now, so I have to go.

நான் கவலைப்படவில்லை என்று நீங்கள் நினைப்பதை நான் நினைத்து வருந்துகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI’d hate for you to think I didn’t care.I’m sorry you think I didn’t care. Note:“I’d hate (for) someone/something to do something” means that you would be upset or feel sorry if someone did/ said something.

எனக்கு தெரியும். என்னால் அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. அவள் எப்போதும் என் மனதில் இருப்பாள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க? AnswerI know. I can’t help thinking about her. She’s always on my mind. [or]I know. I can’t stop thinking about her. She will always be in my mind.